சிறை சென்றார் முன்னாள் பிரதமர் ரணில்

முன்னாள் பிரதமரும் ஐ. தே. கவின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க, நீர்கொழும்பு சிறைச்சாலைக்கு இன்றுகாலை சென்றுள்ளார்.

கட்சியின் நீர்கொழும்பு முன்னாள் அமைப்பாளரும், மேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினரும், நீர்கொழும்பு மாநகர சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான ரொயிஸ் விஜித்த பெர்னாந்து , மற்றும் சிலாபம் அமைப்பாளரும் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சாந்த அபேசேகர ஆகியோரின் நலனை விசாரிப்பதற்கே ரணில் விக்கிரமசிங்க சிறைச்சாலைக்கு சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஊடகவியலாளர்கள் சிறைச்சாலைக்குள் சென்று செய்தி சேகரிப்பதற்கு அனுமதிக்கப்படவில்லை எனவும் கூறப்படுகின்றது.

மேலும் ரணில் விக்ரமசிங்கவிற்காக சிறைச்சாலை வாயிலில் ஊடகவியலாளர்கள் காத்து நின்ற போதிலும் அவர் கருத்து தெரிவிக்க மறுத்து அங்கிருந்து சென்றுள்ளதாகவும் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.