இதை எடுத்துகிட்டு 500 ரூபாய் கொடுங்க போதும்… மருத்துவமனை வாசலில் இளம்பெண் செய்த செயல்..!

சென்னையில் உள்ள ஸ்டான்லி மருத்துவமனையில் இளம்பெண் ஒருவர் நோயாளிகளிடம் மோசடி சம்பவங்களில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வடசென்னை பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையான ஸ்டான்லி மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடம் இளம்பெண் ஒருவர் மிகவும் நெருக்கமாக பேசி வந்துள்ளார்.

இந்நிலையில், நெருக்கமாக பேசி அவர்கள் தன் வழிக்கு வரும்பட்சத்தில், என் அப்பாவுக்கு உடம்பு சரியில்லை. மிகவும் மோசமான நிலையில் உள்ளார். சேமித்து வைத்த பணம் அனைத்தையும் செலவழித்து விட்டேன். தயவுசெய்து இந்த தங்க நாணயத்தை வாங்கிக்கொண்டு 500 ரூபாய் மட்டும் தாருங்கள்” என்று பலரிடமும் கேட்டுள்ளார்.

பலரும், இந்த பெண்ணின் பேச்சில் பரிதாபபட்டு குறித்த பெண்ணுக்கு பணம் கொடுத்துள்ளனர்.

அதன் பின்பே, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளனர். அதாவது, அந்த பெண் கொடுத்த நாணயம் தங்கம் இல்லை, அது கவரிங் என்று சிலர் கண்டுபிடித்துள்ளனர்.

இதே போன்ற புகார்கள் சென்னை வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் அடுத்தடுத்து குவிய தொடங்கியதையடுத்து, உடனடியாக காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் சேர்ந்த பிரியா என்ற 22 வயது பெண் தான் இந்த குற்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

உடனடியாக காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் மேலும் ஒரு திடுக்கிடும் உண்மை வெளியாகியுள்ளது.

இவர், இவ்வாறான ஏமாற்று வேலைகளை செய்வது மட்டுமல்லாது, கொள்ளச் சம்பவங்களிலும் ஈடுபட்டுள்ளார். 1 வாரத்திற்கு முன்பாக ஸ்டான்லி மருத்துவமனைக்கு சென்றுகொண்டிருந்த முதியவரிடம், “இரவு நேரங்களில் இதுபோன்ற இடங்களில் நகைகளை அணியாதீர்கள். தயவுசெய்து கைப்பைக்குள் வைத்துக்கொள்ளுங்கள்” என்று கூறியுள்ளார். அதன்பின்னர் அந்த முதியவரின் கைப்பையை திருடி 3 பவுண்ட் மதிப்பான தங்க சங்கிலியை திருடியுள்ளார்.

கொள்ளை சம்பவங்களில் பிரியா மீது வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் அவரை சிறையிலடைத்துள்ளனர். இந்த சம்பவமானது ஸ்டான்லி மருத்துவமனையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.