யாழில் ஆர்ப்பாட்டத்தில் குழப்பம் விளைவித்த பெண்! (Video)


சிரிய நாட்டில் இடம்பெற்று வரும்  இனப்படுகொலைக்கெதிரான கண்டன ஆர்ப்பாட்டம் யாழ். மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று வியாழக்கிழமை(01) முற்பகல்-10 மணி முதல் இடம்பெற்றது.
இந்த ஆர்ப்பாட்டம்  ஆரம்பமாகிச் சில நிமிடங்களில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற பகுதிக்கு வருகை தந்த நடுத்தர வயதான பெண்ணொருவர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டுள்ளார்.

குறிப்பாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது கைகளில் தாங்கியிருந்த சுலோகங்கள் தொடர்பாக ஒவ்வொருவரிடமும் அவர் விளக்கம் கேட்டுள்ளார். ஆர்ப்பாட்டக்காரர்களை கடுமையாக ஏசிய அவர் தாம் எடுத்து வந்த விளையாட்டுத் துப்பாக்கியை திடீரென எடுத்து  ஆர்ப்பாட்டக்காரர்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டுள்ளார்.

அவர் எடுத்து வந்த துப்பாக்கி உண்மையான துப்பாக்கி என எண்ணிப் பலரும் ஒருகணம் ஆடிப்போனமையையும் அவதானிக்க முடிந்தது.

குறித்த பெண்மணி இவ்வாறு செயற்பட்ட விதம் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தவர்களை இடையூறுக்குள்ளாக்கியதுடன் ஒருவித பரபரப்பையும் ஏற்படுத்தியது.

எனினும், அங்கு பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் மேற்படி பெண்ணின் செயற்பாட்டை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தமை
விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.ஆர்ப்பாட்டம் நிறைவு பெறும் வரை அவரது அச்சுறுத்தலான செயற்பாடு தொடர்ந்த வண்ணமேயிருந்தது.

இதேவேளை, குறித்த பெண் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் எனச் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
Get real time updates directly on you device, subscribe now.

You might also like