சம்பந்தன் திடீர் அறிவிப்பு! அதிர்ச்சியில் அரசியல் தலைவர்கள்

அடுத்த ஆண்டு இடம்பெறும் நாடாளுமன்றத் தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின்போது நாடாளுமன்றத் தேர்தல் ஆசனப் பங்கீடு தொடர்பில் ஆராயப்பட்டிருந்தது.

இதன்போது இரா.சம்பந்தன், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் படித்த இளையோருக்கே முன்னுரிமை வழங்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

மேலும் தான் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அதே வேளை நீண்ட அரசியல் அனுபவம் உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் இவ் அறிவிப்பு முக்கிய அரசியல் தலைவர்களிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.