யாழ். பல்கலைக்கழக மாணவியொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
குறித்த மாணவி கிளிநொச்சி பரந்தனைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது. இவர், யாழ். பல்கலைக்கழக கலைப்பீடத்தில் முதலாம் ஆண்டில் கற்று வந்துள்ளார்.
மல்லாகம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்த குறித்த மாணவி, நேற்று மாலை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
கிளிநொச்சியிலிருந்து நேற்று மாலையே இவர் யாழ்ப்பாணத்துக்கு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், குறித்த மாணவியின் சகோதரியும் அவருடனேயே வசித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மாலைவேளை வீட்டின் உரிமையாளர் வீட்டுக்கு ஏன் வெளிச்சம் போடவில்லை என கூறிக்கொண்டு வீட்டுக்கு சென்று பார்த்தபோதே மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பான விசாரணைகளை தெல்லிப்பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.






