கோட்டாபயவின் அதிரடியால் கதி கலங்கும் அமைச்சர்கள்!

அரச நிறுவன பிரதானிகளை நியமிப்பதற்காக ஜனாதிபதி கோட்டாபயவின் ஆலோசனைக்கமைய நியமிக்கப்பட்ட குழுவுக்கு 60000 பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 18ஆம் திகதியுடன் விண்ணப்பங்கள் ஏற்கும் திகதி முடிவுக்கு வந்துள்ளது.

இந்த நிலையில் கிடைத்துள்ள விண்ணப்பங்களை ஆராய்ந்து எதிர்வரும் ஜனவரி மாதம் நேர்முக பரீட்சை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அரச நிறுவனங்களுக்கு பிரதானிகளை நியமிக்கும் போது சட்டத்திட்டங்களுடன் நடவடிக்கை மேற்கொள்வதற்காக இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது. இதன் ஊடாக தகுதியானவர்களை நியமிப்பதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.

எனினும் ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அவர்களுக்கு தேவையான நபர்களை நியமிப்பதற்கு பெயரிட முடியாமல் போனமையினால் அவர்கள் அதிருப்தி அடைந்துள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.