பௌத்தவிவகார அமைச்சின் செயலாளராக முஸ்லீம்! கோட்டாபயவின் அதிரடி நியமனம்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கீழ் உள்ள, புத்தசாசன அமைச்சின் செயலாளராக பர்சான் மன்சூர் நியமிக்கப்பட்டுள்ளார்.

பௌத்தவிவகார அமைச்சின் செயலாளராக இதுவரை காலமும் சிங்களவர் ஒருவரே இருந்துவந்த நிலையில் அந்த அமைச்சின் செயலாளராக முதன்முதலாக முஸ்லிம் ஒருவரை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ நியமனம் செய்துள்ளார்.

இந்நிலையில் ஜனாதிபதியின் இந்த செயலானது பலருக்கும் வியப்பினை ஏற்படுத்தியுள்ளது.

இனங்களுக்கிடையே நல்லுறவை பேணும் ஜனாதிபதியின் இந்த முயற்சிக்கு சமூக ஆர்வலர்கள் பலரும் வரவேற்பளித்துள்ளனர்.

இதேவேளை பர்சான் மன்சூர் , மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் அவரது இணைப்பு செயலாளராக பணிபுரிந்தவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.