கிளிநொச்சி முரசுமோட்டை இரண்டாம் கட்டை பகுதியில் 24 வயதான இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞன் கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக முகாமைத்துவ உதவியாளரும் கிளிநொச்சி முருகானந்த கல்லூரி பழைய மாணவனும் ஆவார்.
ரவிச்சந்திரன் ரிதுசன் என்ற 24 வயதான இளைஞனே இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் இன்று பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்
காலையில் வீட்டிலிருந்தவர்கள் வேலைகளுக்காக வெளியில் சென்றுவிட்டு இரண்டு மணியளவில் வீடு திரும்பிய போதே குறித்த இளைஞர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்
இந்நிலையில் இளைஞரின் மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்டு வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.






