முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்னவை கைது செய்யுமாறு உத்தரவு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்னவை உடனடியாக கைது செய்யுமாறு சட்ட மா அதிபர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

வெள்ளை வான் ஊடகசந்திப்பு தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில், நீதிமன்றில் பிடியாணையை பெற்று அவரை கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வெள்ளை வான் கடத்தல் தொடர்பில் போலியான தகவல்களை வெளியிட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் ராஜித கைது செய்யப்படவுள்ளார்.

முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க விபத்து வழக்கில் கைது செய்யப்பட்டு இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில் ராஜித சேனாரட்னவை கைது செய்யுமாறு சட்ட மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

பிந்திய தகவலின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்வதற்கு கொழும்பு மேலதிக நீதவான் பண்டார நெலும்தெனிய சற்று முன் பிடியாணை பிறப்பித்துள்ளார்.

இதற்கமைய இன்னும் சில மணித்தியாலங்களில் ராஜித சேனாரத்ன கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது