உத்தியோகபூர்வ இல்லங்களை இதுவரை கையளிக்காத முன்னாள் அமைச்சர்களிடம் அபராதத்தை அறவிடுவதற்கு தீர்மானிக்கபட்டுள்ளது.
பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற அமைச்சு இந்த தீர்மானித்தை எடுத்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
எனினும் முன்னாள் அமைச்சர்களில் சிலர் இதுவரை தங்களின் உத்தியோகபூர்வ இல்லங்களைக் கையளித்துள்ள நிலையில் பெரும்பாலான முன்னாள் அமைச்சர்கள் இதுவரை தங்களின் உத்தியோகபூர்வ இல்லங்களை கையளிக்கவில்லை என உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் சிறிபால ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அவர்களுக்கு வீடுகளைக் கையளிக்குமாறு கோரி இரண்டாவது தடவையாகவும் நினைவூட்டுகைக் கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் சிறிபால ஹெட்டியாரச்சி மேலும் தெரிவித்துள்ளார்.






