ரயில் பயணச் சீட்டுக்களை சுற்றுலாப் பயணிகள் நேரடியாக கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலேயே கொள்வனவு செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக விமான நிலையத்திலேயே விசேட பயணச் சீட்டு விற்பனை செய்யும் நிலையம் ஒன்று ஸ்தாபிக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள புகையிரத சேவைகள் இராஜாங்க அமைச்சர் சி.பி.ரத்நாயக்க,
தனியார் சுற்றுலா நிறுவனங்கள் ரயில் பயணச் சீட்டுக்களை கொள்வனவு செய்து, அதிக விலையில் சுற்றுலாப் பயணிகளுக்கு விற்பனை செய்வதாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த முறைப்பாட்டுக்கு அமையவே ரயில் பயணச் சீட்டுக்களை சுற்றுலாப் பயணிகள் நேரடியாக கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலேயே கொள்வனவு செய்வதற்கு ஏற்பாடு செய்திருக்கிறோம்.
அதற்காக விமான நிலையத்திலேயே விசேட பயணச் சீட்டு விற்பனை செய்யும் நிலையம் ஒன்று ஸ்தாபிக்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.






