நாகப்பாம்பை கழுத்தில் சுற்றியபடி பூஜை! பெண் சாமியார் பற்றி வெளியான பகீர் தகவல்கள்

தமிழகத்தில் நாகப்பாம்பை கழுத்தில் வைத்து கொண்டு சர்ப்ப சாந்தி பூஜை செய்த பெண் சாமியார் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் தொடர்பில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.

வாலாஜாபாத்தில் பாம்பை கழுத்தில் அணிந்து கொண்டு பக்தர்களுக்கு வட பத்திரகாளியம்மன் அருள் வாக்கு சொல்லி வந்தார் பெண் சாமியார் கபிலா.

இவர் நாகப்பாம்பை கழுத்தில் மாட்டி கொண்டு சர்ப்ப சாந்தி பூஜை நடத்துவதை வீடியோவாக எடுத்து யூடியூப்பில் தொடர்ந்து வெளியிட்டு வந்தார்.

இதுவே அவருக்கு வினையாகி வனத்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

எம்.ஏ பட்டதாரியான கபிலா 20 வருடங்களுக்கு முன்னர் சிறிய இடத்தில் குடிசை போட்டு குறி பார்க்க தொடங்கினார்.

அப்போது நெற்றியில் நிறைய குங்குமம், எலுமிச்சை மாலை என அணிந்து கொண்டு தன்னை அம்மனின் அவதாரமாகவே காட்டி கொண்டார்.

கோவில்களில் விலங்குகளை பலியிடக்கூடாது என்ற சட்டம் 2003ல் தமிழகத்தில் இருந்தே போதே இருபது கோழிகளை கடித்து துப்பி அதிரவைத்தவர் தான் கபிலா.

பின்னர் அவரின் பெயர் பக்தர்களிடையே பரவ கூட்டம் அதிகமாகி, குடிசையானது கோவிலாக மாறியது.

ஆனால் சில வருடங்களாக கூட்டம் குறையவே கழுத்தில் பாம்புகளை போட்டு கொண்டு வீடியோ எடுத்து யூடியூப்பில் வெளியிட்டு பக்தர்களை ஈர்க்க முடிவெடுத்து அதை செய்யவும் தொடங்கினார்.

மேலும் பழங்குடியினரிடம் பாம்புகளை அவர் வாங்கியுள்ளார்.ஆனால் அவர் வீட்டில் வனத்துறையினர் சோதனை செய்த போது பாம்புகள் எதுவும் கிடைக்கவில்லை என தெரியவந்துள்ளது.