பச்சிளம் சிசுவை காட்டில் வீசிய இலங்கை பெண்! இரவு முழுவதும் குழந்தை கதறி அழுத பரிதாபம்

பெற்ற பச்சிளம் சிசுவை காட்டில் வீசிய பெண்ணொருவர் இன்று காலை பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த பெண்ணையும் வீசப்பட்ட குழந்தையையும் எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் ஹம்பேகமுவ பொலிஸார்,அனுமதித்துள்ளனர்.

ஹம்பேகமுவ – ரத்தஹோலாகம பிரதேசத்தில் காட்டில் குழந்தையின் அழுகை சத்தம் கேட்பதாக பொலிஸ் அவசர இலக்கத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.

இதை அடுத்து, அங்கு விரைந்த பொலிஸார் காட்டில் வீசப்பட்டிருந்த குழந்தையை மீட்டுள்ளனர்.

குறித்த குழந்தை நேற்றிரவு காட்டில் வீசப்பட்டுள்ள நிலையில் இன்று காலை வரை பச்சிளம் குழந்தை குளிரில் நடுங்கியவாறு பசியில் அழுது கொண்டிருந்தாகவும், பொலிஸார் கூறியுள்ளனர்.

குழந்தையும் தாயும் முதலில் ஹம்பேகமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின் அங்கிருந்து எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் குழந்தையை தாய் காட்டில் வீசியமைக்காக காரணம் என்ன என்பதை கண்டறிய, ஹம்பேகமுவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.ராஜபக்சவின் நெறிப்படுத்தலின் கீழ் பெண் பொலிஸ் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.