கொழும்பிலுள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தின் பெண் பணியாளரது சொத்து விபரங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கள செய்தி இணையத்தளமொன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
கடந்த வருடத்தில் மட்டும் 1317 பேர் இலங்கையில் இருந்து சுவிட்சர்லாந்து நாட்டிற்கு அரசியல் தஞ்சம் கோரிச் சென்றுள்ளதாக கொழும்பில் உள்ள சுவிஸ் தூதரகத்தை மேற்கோள்காட்டி அந்த ஊடகம் செய்தி வெளியிட்டிருக்கிறது.
இவர்களிடம் இருந்து 5 தொடக்கம் 10 இலட்சம் ரூபா வரையான பணத்தை குறித்த பெண் தூதரக அதிகாரி அறவிட்டிருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
இதன் காரணமாக விளக்கமறியலில் தற்போது இருக்கும் குறித்த பெண் பணியாளரது சொத்து விபரங்கள் குறித்து விசாரணை செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.