2019 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளில் வணிகத்துறையில் முல்லைத்தீவு மாவட்ட ரீதியில் முதலிடம் பெற்று மாணவி சாதித்துள்ளார்.
இறுதி யுத்தத்தில் தந்தையை தொலைத்துவிட்டு சிறு வயதிலிருந்து ஒரு கையை இழந்த தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வணிகத்துறையில் முல்லைத்தீவு மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்று சாதித்துள்ளார் மாணவி இரவிச்சந்திரன் யாழினி.
இன்று (27) பிற்பகல் வெளியாகியுள்ள பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் தேவிபுரம் அ பகுதியை சேர்ந்த புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவி இரவிச்சந்திரன் யாழினி வணிகத்துறையில் மாவட்ட ரீதியில் முதலிடத்தை பெற்றுள்ளார்
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது தனது தந்தையை தொலைத்து காணாமல் போனவர்கள் பட்டியலில் தந்தையை தேடிக்கொண்டிருக்கும் குறித்த மாணவி ஒரு கையை இழந்த தன்னுடைய தாயின் அரவணைப்பில் வாழ்ந்துவருகிறார்.







