22,475 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தகவல்!

பண்டிகை காலத்தில் பல்வேறு போக்குவரத்து குற்றச்சட்டுக்களுடன் தொடர்புடைய 22,475 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர்.

டிசம்பர் 21 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு சோதனை நடவடிக்கையின்போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதில் 1,733 பேர் மதுபோதையில் வாகனங்களை செலுத்திய குற்றச் சாட்டியில் கைதுசெய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.