அகில இலங்கை சமுர்த்தி முகாமையாளர்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகள் பலவற்றுக்கு, விரைவில் தீர்வு பெற்றுக் கொடுக்கப்படுமென அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.
அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சிக்கும், அகில இலங்கை சமுர்த்தி முகாமையாளர்களின் சங்க உறுப்பினர்களுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
அத்துடன், பதவி உயர்வுகள் தொடர்பிலும் உரிய நடைமுறை வகுக்கப்படும் எனவும் அமைச்சர் இதன் போது உறுதியளித்தார்.






