உலர்ந்த பழங்கள் உட்பட பல உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதிப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அந்தவகையில் உள்நாட்டில் உற்பத்தி செய்யக்கூடிய பல உணவுப் பொருட்களை இறக்குமதி செய்ய தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்தார்.
உள்நாட்டு விவசாயிகளுக்கு நன்மையளிக்கும் முகமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் உள்நாட்டு உற்பத்தியை அதிகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதன்காரணமாக அரசாங்கம் உள்நாட்டில் உற்பத்தி செய்யக்கூடிய பல உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதை தடை செய்யும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.






