மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் சாரதி அனுமதிப்பத்திரங்களை பெற இலஞ்சம் வாங்கி தரகர்களாக செயற்பட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெஹரஹர அலுவலகத்தில் புலனாய்வு பிரிவினர் இன்று மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
அண்மையில் குறித்த அலுவலகத்திற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச திடீர் விஜயம் மேற்கொண்டிருந்தார்.
அதன்பின்னர், அங்கு அதிரடி மாற்றங்கள் இடம்பெற்று வருகின்றன.
இந்தநிலையில், அங்கு சாரதி அனுமதிப்பத்திரம் உள்ளிட்டவற்றை பெற இலஞ்சம் பெற்றுவந்த ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.






