தமது நாட்டை நோக்கி வருபவர்களுக்கு தமிழ் மொழியில் அவுஸ்திரேலியா விடுத்துள்ள எச்சரிக்கை!

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்குள் நுழைபவர்கள் சொந்த நாட்டிற்கே திருப்பி அனுப்பப்படுவார்கள் என தொடர்ச்சியாக அவுஸ்திரேலிய அரசு எச்சரிக்கையை விடுத்து வருகின்றது.அந்த வகையில் பேஸ்புக் உள்ளிட்ட பல சமூக வலைத்தளங்களை குறிவைத்து தமிழ், ஹிந்தி, சிங்களம் உள்ளிட்ட 17 மொழிகளில் எச்சரிக்கை வெளியாகியுள்ளது.

அதன் அடிப்படையில், எல்லைப் பாதுகாப்பு நடவடிக்கையின் கீழ் சட்டவிரோதமாக படகுமூலம் அவுஸ்திரேலியாவுக்குப் பயணிக்க எத்தனிக்கும் எந்தவொரு நபரும் அவர் புறப்பட்டு வந்த நாட்டிற்கே திருப்பி அனுப்பப்படுவார்.படகு வழியாக சட்டவிரோதமாக பயணிப்பவருக்கு அவுஸ்திரேலியாவில் குடியேறுவது ஒருபோதும் அவரின் விருப்பத் தேர்வாகாது.

உறவினர், குழந்தைகள், சிறுவர்கள், படித்தவர்கள் மற்றும் திறமைசாலிகள் அனைவருக்கும் இந்த விதிகள் பொருந்தும். விதிவிலக்குகள் இல்லை.அவுஸ்திரேலியா தனது கொள்கையைக் காலப்போக்கில் இலகுவாக்கிவிடுமென ஆட்கடத்துவோர் உங்களுக்குச் சொல்வார்கள்.

அவுஸ்திரேலியா தனது கடுமையான நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவுமில்லை, மாற்றப்போவதுமில்லை என அவுஸ்திரேலிய அரசின் அதிகாரப்பூர்வ விளக்கம் குறிப்பிடுகின்றது.இப்படி அவுஸ்திரேலியா செல்ல முயற்சித்தவர்கள் இந்தோனேசியாவில் தஞ்சமடையும் சம்பவங்களும் கடந்த காலங்களில் நிகழ்ந்துள்ளன.
ஆனால், இந்தோனேசியா வழியாக அவுஸ்திரேலியாவில் குடியமரலாம் என்ற வழிக்கும் அவுஸ்திரேலிய அரசு முட்டுக்கட்டைப் போட்டுள்ளது.