நடிகர் விஜய் பட போஸ்டரில் பிசாசின் கொம்பு!.. வைரலாகும் பகீர் தகவல்

இளைய தளபதி விஜய் நடித்து வரும் 64 வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

”மாஸ்டர்” என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் விஜய் கல்லூரி பேராசிரியராக நடிக்கிறாராம்.

இந்நிலையில், பாரி சாலன் என்பவர் இந்த போஸ்டர் குறித்து சர்ச்சையான கருத்து ஒன்றை கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பேஸ்புக் பதிவில், மாஸ்டர் படத்தின் போஸ்டரில் முக்கோண வடிவமும், பிசாசின் கொம்பும் இடம் பெற்றுள்ளது.

நடிகர் விஜய்யும் அந்த ரகசிய சமூகத்திற்குள் சென்று விட்டார் என்பது போல தெரிகின்றது. தமிழ் நாட்டை நெருப்பின் மூலம் அழிக்க சதிகள் நடை பெறுகின்றன.

நடிகர் விஜய் அவர்களின் பிடியில் இருந்து வெளியேற வேண்டும். இல்லையென்றால், மைக்கேல் ஜாக்சன் மரணத்தை போல மர்மமான மரணத்த்தில் தான் விஜய் வாழ்கை முடியும் என தெரிவித்துள்ளார்.