மட்டக்களப்பில் பெண் ஒருவர் செலுத்திய கார் வேக கட்டுப்பாட்டை இழந்து பாதசாரிகள் மீது மோதியுள்ளது.
இந்த சம்பவத்தில் மூவர் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இவ்விபத்தானது மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி காவல்துறைபிரிவுக்குட்பட்ட கல்லடி பகுதியில் இன்று இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு ஊறணி பகுதியில் உறவினர் வீட்டில் இருந்து ஆரையம்பதி நோக்கி சென்ற கார் தனது கட்டுடைப்பாட்டை இழந்து இவ்வாறு பாதிசாரிகள்மீது மோதி விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தில் உயிரிழந்தவர் வயது 72 உடையவர் எனவும் தனது ஊரான அரசடித்தீவுக்கு செல்வதற்காக நின்றவேளை இந்த அனர்த்தம் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த காத்தான்குடி போக்குவரத்து பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.






