குடும்பத்தினர் அணியும் பாரம்பரிய சட்டை அணியாத காரணத்தை கூறினார் கோட்டாபய

ஹம்பாந்தோட்டையில் அரசியல் குடும்பமான தனது குடும்பத்தில், தான் அரசியல் ரீதியில் பிரவேசிக்கவில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.

இராணுவ சேவையிலும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகவும் தான் பதவிவகித்ததாக குறிப்பிட்ட அவர் , மக்களின் துன்பங்களை தான் அறிவேன் எனவும் கூறியுள்ளார்.

அத்துடன் தன்னுடைய குடும்பத்தினர், அணியும் சாட்டைக்கு ஓர் அர்த்தம் உள்ளதாகவும், அதனால் தமது குடும்ப உறுப்பினர்கள் அந்த சட்டையை அணிகின்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் தான் அந்த சட்டையை அணியமாட்டேன் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, ஆனால், அந்த சட்டையால் முன்னெடுக்கப்படவேண்டிய பணியை தான் முன்னெடுப்​பேன் எனவும் கூறியுள்ளார்.

இதேவேளை பாராளுமன்றத்தை கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து, உரையாற்ற வந்த ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, மேற்கத்திய உடை அணிந்து இன்று பாராளுமன்றிற்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.