யாழில் அண்மையில் திருமணம் முடித்த மருத்துவரின் மனைவி தற்கொலை! வெளிவரும் அதிர்ச்சித் தகவல்

கடந்த சில தினங்களின் முன்னர் யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் அண்மையில் மருத்துவர் ஒருவரை திருமணம் செய்த இளம் குடும்பப் பெண் தற்கொலை செய்துகொண்டதாக செய்திகள் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் குறித்த பெண் சீதன கொடுமையால் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

பாரம்பரியத்திற்கும், பெண்ணியத்திற்கும் பெருமை காக்கும் என பெயர்போன யாழ் மண்ணில் சீதனகொடுமையால் படித்த இளம் பெண்ணொருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளமையானது பலரையும் வேதனைக்குள்ளாக்கியுள்ளது.

குறித்த பெண்ணின் மரணம் தொடர்பில் சமூகவலைத்தளங்களில் கவிதையொன்று வெளியாகியுள்ளது.

ஒரு கோடி ரூபா சீதனமாகக் கொடுத்த வீட்டில்

ஒரு நேரமும் உறங்க முடியாது

ஒரு நேரச் சாப்பாட்டையும் சாப்பிட முடியாது

வைத்தியரைத் திருமணம் செய்த பெண்

மன வைத்தியத்துக்கு மருந்தில்லாமலும்

நிம்மதியில்லாமலும்

நோயாளியாகி தற்கொலை செய்யும் பாவப்பட்ட நிலை ஏன்?

ஆண் பிள்ளைகளைத் திருமணம் செய்து கொடுத்த

தாய்மார் பிள்ளைகளை மறுபடியும் கற்பப் பைக்குள் அனுப்ப வேண்டுமாயின்

மணவறைக்கு அனுப்புவது ஏன்?

அழகான இந்த முகத்தை அழுக்காக்கிக் கொன்றது இந்தப் பாழாய்ப் போன சீதனம்.

ஆணாதிக்கத்தின் உச்சம் ஒரு பெண்ணின் உயிரைப் பறித்தது என்றால் ஒட்டுமொத்த ஆணினமும் வெட்கித் தலைகுனிய வேண்டிய தருணம் இது.

அழகான இந்த முகத்தை அழுக்காக்கி கொன்றது இந்த சமூகம்… சீதனம் எனவும் ஆணாதிக்கம் எனவும் உத்தியோகம் எனவும் வெளிநாட்டு மோகம் எனவும்….

உண்மையான அன்பும் அமைதியும் வாழ்வும் இவற்றில் இல்லை என்பதை என்று பெண்கள் உணர்கிறார்களோ அன்றே பெண்கள் விடுதலை பெறுவர் பெண் விடுதலை பெறுகையிலே சமூக தேச விடுதலை அமையும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.