நாம் மாற்றத்திற்காக ஒன்றுபட வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளதாக யாழ் மறைமாவட்டகுருமுதல்வர்தெரிவிப்பு

நாம் மாற்றத்திற்காக ஒன்றுபட வேண்டிய காலம் வந்துவிட்டது நாம் இனியும் தனித்துத் இருப்போமேயானால் எமது இனத்திற்கான தீர்வினை பெற்றுக்கொடுக்க முடியாது எனவே சுய நிலங்களை கைவிட்டுவிட்டு தமிழ் மக்களின் நலனுக்காக சிந்திப்பதற்காக அனைவரும் ஒன்றுபட வேண்டிய காலம் வந்துள்ளதாக யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் ஜெபரட்ணம் அடிகளார் தெரிவித்தார் . நாம் நமக்காக ஒன்றாய் இணைவோம் காப்போம் எனும் தொனிப்பொருளிளான கருத்தரங்கு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுவருகின்றது இந்த நிகழ்வில் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்

தாய்நிலம் அறக்கட்டளை சுவிஸ் அமைப்பின் ஏற்பாட்டில் இன்றைய காலத்தின் தேவை கருதி எமது மக்களின் விடிவிற்காக ஒரே பாதையில் ஒரே லட்சியம் ஒரே குறிக்கோளோடு நாம் அனைவரும் ஒன்றாய் இணைவோம் புதிய சரித்திரம் படைப்போம் எனும் தொனிப்பொருளில் பொது அமைப்புக்கள் மற்றும் புத்திஜீவிகள் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் தேச நலம் விரும்பிகள் அனைவரும் ஒன்றிணைந்து பங்குபற்றும் கருத்தரங்கு யாழ்ப்பாணம் பாதுகாவலர் மண்டபத்தில் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது. குறித்த கருத்தரங்கில் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் மத குருமார் மற்றும் கல்வியாளர்கள் சமூக ஆர்வலர்கள் என பலர் கலந்து கொண்டுள்ளார்கள் என்ற கருத்தரங்கின் முடிவில் எதிர்வரும் காலத்தில் நாம் அவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பில் தீர்மானம் ஒன்றும் எடுக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.