மிதமிஞ்சிய வேகத்தால் முறிகண்டியில் பரிதாபமாக பலியான இளைஞன்

முல்லைதீவு, மாங்குளம் முறிகண்டியில் மிதமிஞ்சிய வேகத்தால் இளைஞன் ஒருவர் பரிதாபமாக ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் இன்று இரவு 8.45 மணியளவில் முறிகண்டிப் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது.

ஏ-9 வீதியில் வேகமாகப் பயணித்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்தாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

விபத்தில் உயிரிழந்த இளைஞன் சாந்தபுரம் பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய சுப்பையா தர்ஷன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.