யாழ்ப்பாணம் காரைநகர் கல்லுண்டாய் வீதி கார்ப்பெற் வீதி செப்பனிடும் பணி ஆரம்பம்

யாழ்ப்பாணம் காரைநகர் கல்லுண்டாய் வீதி கார்ப்பெற் வீதி செப்பனிடும் பணி உத்தியோக பூர்வமாக முழுவளகத்துடன் செயது முடிக்கும் பணிகள் 03.01.2020 அன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் ஊடாக அறியப்படுகின்றது.

கடந்த கால அரசினால் முன்னெடுக்கப்பட்டு ஆயத்த வேலைகள் நடைபெற்று வந்துள்ள போதிலும் ஆட்சி மாற்றத்தினால் என்னாகுமோ என்று அங்கலாய்த்த வேளையில் இந்த பணியினை செய்து முடிக்க நிறுவனம் எடுத்துக்கொண்ட முயற்சிகளினாலும் தற்போதைய அரசியல் பின்னணிகளினாலும் இந்த வீதியின் முக்கியத்துவம் உணர்ந்து கொள்ளப்பட்டதன் காரணத்தினாலும் இந்த வீதி கார்ப்பற் வீதியாக மாற்றம் பெறும் பணியில் எவ்வித தடைகளும் ஏற்படவில்லை. 20 மாதங்களில் முழுமையாக இப்பணி செய்து முடிக்கப்படும் என நம்பப்படுகிறது.