யாழ்ப்பாணம் பேரூந்து நிலையத்துல் இருந்த பணியாளர் ஒருவர் மீது செய்யப்பட்ட பணியாளரை பொலிசார் கைது செய்தமையை கண்டுத்து இரண்டு மணிநேரம் பேரூந்து சேவையினை சாரதிகள் இடைநிறுத்துயமையால் பயணிகள் பெரும் சிரமத்தை எதிர் கொண்டனர்.
தெற்கில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சேவையில் வந்த பேரூந்தின் நடத்துநரிற்கு வழித்தட அனுமதி இல்லை என்பதனால் அதனை வழங்க முடியாது என வழங்குவதில் ஏற்பட்ட முரண்பாட்டிற்கு தெற்கு நடத்துநர் தனது பையில் இருந்த பணத்தை கானவில்லை எனபோலியான முறைப்பாடு செய்த நிலையில் எமது சக ஊழியரை பொலிசார் கைது செய்தமையினால் விடுவிக்கும் வரையில் சேவையில் ஈடுபட முடியாது என மாலை 5.30 இல் இருந்து எந்தவிதமான முன் அறிவுத்தலும. இன்றி திடீரென பனிப் புறக்கணிப்பில் இ.போ.சபை சாரதிகள் நடத்துநர்கள் ஈடுபட்டனர்.
இவ்வாறு பேரூந்துகள் சேவைப் புறக்கணிப்பில் ஈடுபட்டமையினால் கண்டி , கொரும்பு உட்பட பிற மாவட்ட பேரூந்துகளிற்கு பணத்தை செலுத்மி ஆசணப் பதிவுகளை மேற்கொண்டவர்களும் மன்னார் , வவுனியா உள்ளிட்ட பேரூந்துகளில் பயணிப்பதற்காக பேரூந்தில் ஏறிய சமயம் பணத்தை பெற்று சிட்டையை வழங்கிய பேரூந்துகளும் சேவைப் புறக்கணிப்பில் ஈடுபட்டதனால் அதில் பயணிப்பதற்காக காத்திருந்த அதிக பெண்கள் பதற்றத்தோடு கானப்பட்ட நிலையில் பேரூந்துகளை எடுங்கள் அல்லது நாம் செலுத்திய பணத்தை மீளத் தாருங்கள் என பயணிகள் பலரும் கோரினர்.
இவ்வாறு கோரியவர்களுடன் சாரதிகள் , நடத்துநர்கள் சாலை ஊழியர்கள் பலர் தகாத வார்த்தைகளை உபயோகித்தமை மட்டுமன்றி தூசண வார்த்தைகளையும. உபயோகித்தமை அங்கிருந்த பயணிகளை முகம் சலிக்க வைத்தது. இந்த நிலையில் இரவு 7 மணியை தாண்டிய நிலையில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அவ்விடத்திற்கு வருகை தந்தபோது தமது ஊழியர் பணத்தை திருடியதாக கைது செய்தமையினாலேயே பணிப்புறக்கணிப்பை மேற்கொள்வதாக தெரிவித்தனர்.
இருப்பினும் ஊழியர் அடித்ததோடு இன்னொருவரின் கைத் தொலைபேசியையும் காணவில்லை எனச் செய்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே கைது செய்த்தாகவும் அவ்வாறு குறித்த ஊழியர் பணியில் இருந்த்தாக தெரிவிக்கின்றீர்கள் ஆனால் அந்த ஊழியர் அதிக மது போதையில் உள்ளார் எனவும் ஊழியர்கள் முன்னிலையில் பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

இது தொடர்பில் இ.போ.சபை அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது ,
இ.போ.சபை ஊழியரிற்கு ஏற்பட்ட பாதிப்பு காரணமாக சேவை தடைப்பட்டபோதும் நிலமை சீர் செய்யப்பட்ட பின்னர் நிலமை வழமைக்கு திரும்பியது. எனப் பதிலளித்தனர். –






