வவுனியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு!

வவுனியா ஹொரவப்போத்தானை வீதியில் அமைந்துள்ள AFRIEL அமைப்பின் விடுதியிலிருந்து இன்று (25.02.2018) காலை 9.30 மணியளவில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

குறித்த விடுதியில் நேற்றையதினம் ( 24.02.2018) மாலை வேளை விடுதியில் தங்கியிருந்த இருவர் மதுபானம் அருந்தியுள்ளனர். இரவு 7 மணியளவில் ஒருவர் வெளியே சென்றுள்ளார். இதன் போது குறித்த விடுதியில் ரகுநாதன் சுகிர்தரன் (31 வயதுடைய தூக்கில் தொங்கிய நபர்) இருந்துள்ளார். இரவு 12 மணியளவில் குறித்த நபர் விடுதிக்கு திரும்பியுள்ளார்.

இன்று காலை 9.30 மணியாகியும் குறித்த நபர் அறையினை விட்டு வெளியே வராத காரணத்தினால் விடுதியில் தங்கியிருந்த மற்றைய நபர் அறையின் கதவினையுடைத்துள்ளார். அதன் போது ரகுநாதன் சுகிர்தரன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார்.

உடனடியாக 119 அவசர பொலிஸ் இலக்கத்திற்கு தகவல் வழங்கியதையத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

காதல் விவகாரத்தினால் குறித்த நபர் தூக்கில் தொங்கியிருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like