விழுந்து நொறுங்கிய விமானம்: 176 பேர் உயிரிழப்பு.. ஏவுகணையால் தாக்கப்பட்டதா? வெளியான பகீர் காட்சி..!

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இருந்து 176 பேருடன் புறப்பட்ட உக்ரைன் விமானம் தரையில் விழுந்து நொறுங்கியதில் அனைவரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே பயணிகள் விமானம் விபத்தில் சிக்கியதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

சமீப நாட்களாக போயிங் விமானம் உலகம் முழுக்க அதிக விபத்துக்கு உள்ளாகிறது. பொதுவாக போயிங் விமானங்களில் நிறைய கோளாறுகள் இருப்பதாக புகார் எழுந்துள்ளது.

விமான விபத்து நடந்த இடத்திற்கு மீட்பு படையினர் சென்று இருக்கிறார்கள். அங்கு ராணுவமும் குவிக்கப்பட்டு அவசர மீட்பு பணிகள் நடந்து வருகிறது.

ஈரான் – அமெரிக்கா இடையே போர் பதட்டம் நிலவி வரும் நிலையில் விமான விழுந்து நொறுங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து குறித்து ஈரான் அரசு தற்போது தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளது.

குறித்த காட்சி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது அதில், எரியும் தீப்பந்து பூமியில் மோதி வெடிப்பது போன்று உள்ள அந்த வீடியோவில் உள்ளது.

உக்ரைன் விமானம் தான் என கூறப்படுகிறது. விமானம் எரிந்து கொண்டே விழுவது போல தெரிவதால் ராக்கெட்டுகளால் விமானம் தவறுதலாக தாக்கப்பட்டிருக்கலாமோ? என பேசிக் கொள்ளப்படுகிறது.