நிபந்தனைகளின்றி ஈரானிடம் மண்டியிட்ட அமெரிக்கா

ஈரானுடன் எந்தவிதமான முன் நிபந்தனைகளும் இன்றி பேச்சுவார்த்தைக்குத் தயார் என அமெரிக்கா மன்டியிட்டுள்ளமை உலக அரசியலில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கை எதிர் பார்த்த ஒரு நடவடிக்கை என கூறும் அரசியல் அவதானிகள் ஆளுமையற்றவர் அமெரிக்க ஜனாதிபதியானது தான் இத்தனை குறைபாடுகளிற்கும் காரணம் என மேலும் விமர்சனங்கள் முன்வைக்கப் படுகிறது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது…

ஈரானின் மிகமுக்கிய இராணுவத் தளபதி ஜெனரல் காசிம் சோலெய்மனி அமெரிக்காவால் கொல்லப்பட்டதையடுத்து, ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே கடும் பதற்றம் நிலவி வருகின்றது.

இந்த பதற்ற நிலை இரு நாடுகளுக்கிடையிலான போராக மாறினால், உலக நாடுகள் எதிர்கொள்ளும் பாதிப்புக்கள் மிக மோசமானதாக இருக்கும் என்பதால் சீனா, ரஷ்யா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் இரு நாடுகளுக்கும் இடையில் சமாதானத்தை ஏற்படுத்த தீவிரமாக செயற்பட்டு வருகின்றன.

இதற்கிடையில், ‘ஈரான் இராணுவத் தளபதி காசிம் சோலெய்மனியை தற்காப்புக்காகவே கொலை செய்தோம்’ என ஐக்கிய நாடுகள் சபைக்கு அமெரிக்க அரசு கடிதமொன்று எழுதியுள்ளது. இந்த கடிதத்திலேயே அமெரிக்கா இவ்வாறு தெரிவித்துள்ளது.

மேலும், சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்காமல் இருக்கவும், ஈரான் அரசு மேலதிக நடவடிக்கைகள் எடுக்காமல் இருக்கவும், ஈரான் தரப்புடன் தாங்கள் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதுவர் கெல்லி கிராஃப்ட் தெரிவித்துள்ளார்.

எந்தவொரு நாடும் தங்கள் தற்காப்புக் கருதி நடவடிக்கை எடுக்க ஐ.நா. சாசனத்தின் பிரிவு 51 வழிவகை செய்கிறது. இதன் காரணமாகவே இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக அக்கடிதத்தில் அமெரிக்கா விளக்கம் அளித்துள்ளது.

இதேவேளை, ஈரான் மீதான பொருளாதாரத் தடைகள் நீடிக்கும் சூழலில், பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா முன்வந்துள்ளது என்றும் ஈராக்கில் உள்ள அமெரிக்காவின் இராணுவத் தளங்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதலும் ஐ.நா. சாசனத்தின் பிரிவு 51இன் கீழ் நியாயப்படுத்தக்கூடியதே என்றும் ஐ.நா.வுக்கான ஈரான் தூதுவர் மஜித் தக்த் ராவன்சி கூறியுள்ளார்.