யாழ்.பல்கலையின் முன்னாள் துணைவேந்தரை முக்கிய பதவியில் அமர்த்திய கோட்டாபய!

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உறுப்பினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக பேராசிரியர் சம்பத் அமரதுங்க கடந்த வாரம் நியமிக்கப்பட்ட நிலையில் மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவர் மற்றும் 5 உறுப்பினர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதில் தமிழ் உறுப்பினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இரண்டு காலப்பகுதியில் பதவி வகித்த பேராசிரியர் வசந்தி அரசரட்ணம், தற்போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக உயிரியல் இராசயனத் துறையின் முதுநிலை விரிவுரையாளராக உள்ளார் நியமிக்கப்பட்டுள்ளார்.

நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

இதேவேளை, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கடந்த பதவிக்காலத்தில் தமிழ் உறுப்பினராக பேராசிரியர் குமாரவடிவேல் பதவி வகித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like