வெளிநாட்டு பல்கலைக்கழகம் ஒன்றில் பயின்ற இலங்கை மாணவிகள் மூவர் பலி!

அசர்பைஜான் குடியரசின் பல்கலைக்கழகம் ஒன்றில் பயின்ற இலங்கையை சேர்ந்த மூன்று மாணவிகள் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

அசர்பைஜான் குடியரசின் வெஸ்டர்ன் காஸ்பியன் பல்கலைக்கழகத்தில் ஆங்கில மொழி பாடநெறியில் பயின்ற மூன்று இலங்கை மாணவிகளே நேற்று (09) பலியாகியுள்ளனர்.

அந்நாட்டின் பாகு என்ற இடத்தில் அவர்கள் தங்கியிருந்த இரண்டு மாடி குடியிருப்பில் ஏற்பட்ட எரிவாயு கசிவினால் ஏற்பட்ட தீ விபத்தால் புகையை சுவாசித்து மூச்சுத் திணறியே குறித்த மூவரும் மரணமடைந்துள்ளனர்.

இதனை வெளிவிவகார அமைச்சு உறுதி செய்துள்ளது.

நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

Get real time updates directly on you device, subscribe now.

You might also like