சிக்கலில் மைத்திரி மகன்! மிரட்டும் ரஞ்சன்

ஐக்கிய தேசியக் கட்சின் பாராளுமன்ற உறுப்பினருக்கு முக்கியஸ்தர்கள் சிலருக்கும் இடம்பெற்ற அரசியல், அதிகார துஷ்பிரயோகம் தொடர்பிலான ஒலிப்பதிவு செய்யப்பட்ட ஒலிநாட்டாக்கள் வெளியாகியுள்ளமை தென்னிலங்கையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலவின் மகன், தன்னுடைய தந்தையின் அரசியில் அதிகாரத்தை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய காணொளியையும் அம்பலப்படுத்த போவதாக, ரஞ்சன் ராமநாயக்க திடீரென அறிவித்துள்ளார்.

மைத்திரி மகன் தஹம் சிறிசேனவின் மகனால், தனக்கு நெருக்கமான, உதவியளித்த பொலிஸ் அதிகாரிகளுக்கு உயர்பதிவிகளை வழங்கவேண்டுமென எவ்வாறு அழுத்தங்களை கொடுத்தார் என்பது தொடர்பிலான வீடியோ தன்னிடம் இருப்பதாக ரஞ்சன் தெரிவித்துள்ளார்.

குற்றப்புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சானி அபேசேகரவுக்கும் ரஞ்சனுக்கும் இடையிலான தொலைபேசி உரையாடலின் போதே இது தொடர்பான உரையாடல்கள் இடம்பெற்றதாகவும் கூறப்படுகின்றது.

தஹம் சிறிசேன, தன்னுடைய தந்தையின் அதிகாரத்தை எவ்வாறு முறைக்கேடாக பயன்படுத்தி, பொலிஸ் அதிகாரிக்கு உயர் பதவிகளை வாங்குவதற்கு வழிசமைத்தார் என்பது குறித்தும் சானி அபேசேகர தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றமை குறிபிடத்தக்கது.