அஸர்பைஜானில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் இலங்கை மாணவிகள் மூவர் உயிரிழந்த நிலையில், அவர்களில் இருவர் சகோதரிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த மாணவிகளின் (சகோதரிகளது) மரண செய்தியை கேட்ட அவர்களின் அத்தை மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பிலியந்தலையை சேர்ந்த மாணவிகளின் தந்தையின் சகோதரியே இவ்வாறு நேற்று உயிரிழந்துள்ளார்.
அஸர்பைஜானின் தலைநகரில் அமைந்துள்ள காஸ்பியன் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மூன்று இலங்கை மாணவிகள் விஷ வாயுவை சுவாசித்ததால் நேற்று முன்தினம் உயிரிழந்தனர்.
கடுவலை மற்றும் பிலியந்தலை பிரதேசத்தை சேர்ந்த 22 மற்றும் 23, 25 வயதுடைய மல்ஷா சந்தீபனி, தருக்கி அமாயா, தவுசி ஜயவோதி ஆகிய மாணவிகளே உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த மாணவிகளின் சடலங்களை நாட்டுக்கு கொண்டு வரும் நடவடிக்கையை வெளிநாட்டு அமைச்சு மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.