யாழில் இரும்பகம் ஒன்றில் தீடீரென ஏற்பட்ட அசம்பாவிதம்! உடனடியாக விரைந்த பொலிஸார் மற்றும் இராணுவத்தினர்!

யாழ்ப்பாணம் ஸ்டான்லி வீதியில் அமைந்துள்ள இரும்பகம் ஒன்றில் இன்று மதியம் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

உடனடியாக யாழ் மாநகர தீயணைப்பு பிரிவிற்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு பிரிவினர் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இருப்பினும் குறித்த கடை பகுதியளவில் சேதமடைந்ததுடன் பொருட்களும் தீயில் கருகியுள்ளன எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து யாழ் பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கப்பட்டது. பொலிஸாரும் இராணுவத்தினரும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணைகளை மேற்கொண்டனர்.

பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது இந்த தீ விபத்து மின்சார ஒழுக்குக் காரணமாக நிகழ்ந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாண பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளனர்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like