நடு இரவில் அமெரிக்காவை நடுநடுங்க வைத்த ஈரான்!

அமெரிக்கா படையினர் தங்கிருந்த விமானப்படை தளம் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தாக்குதலில் 4 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈரான் ராணுவத்தின் முக்கிய தளபதி குவாசிம் சுலைமானியை ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தி கொலை செய்ததனால், இரு நாடுகளுக்கிடையே போர் பதற்றம் ஏற்பட்டது.

இதற்கு பழிக்கு பழி வாங்குவோம்’ என ஈரானும் கூறிய நிலையில் ஈராக்கும் ஈரானுடன் கைகோர்க்க பதற்றம் மேலும் அதிகரித்தது.

இதனையடுத்து, ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தை குறிவைத்து ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் அமெரிக்கா ராணுவத்தினர் 80 கொல்லப்பட்டதாக கூறப்பட்ட போதும், இதில் அமெரிக்க வீரர்கள் யாரும் பலியாகவில்லை. தாக்குதலுக்கு முன்கூட்டியே அமெரிக்க வீரர்கள் அங்கிருந்து அப்புறப்பட்டதாக அதிபர் டிரம்ப் கூறியிருந்தார்.

இதனையடுத்து, இருநாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் சற்று ஓய்திருந்த நிலையில், ஈராக்கில் தலைநகர் பாக்தாத்துக்கு வடக்கே 90 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பலாட் விமானப்படை தளத்தில் உள்ள அமெரிக்க படை தளத்தின் மீது நேற்று 8 முறை ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

ஏவுகணை விழுந்து வெடித்ததில் நுழைவு வாயில் பகுதியில் இருந்த ஈராக் ராணுவ வீரர்கள் 4 பேர் காயம் அடைந்ததாக கூறப்படுகின்ற நிலையில் இந்த தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை.

இந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து அமெரிக்கா – ஈரான் இடையே மீண்டும் போர் பதற்றம் உருவாகி உள்ள நிலையில் , தாம் தாக்குதல் நடத்தவில்லை என ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.