விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட மாணவி.. அறையில் கைப்பற்றப்பட்ட கடிதத்தால் பரபரப்பு..!

சேலத்தில் பெரியார் பல்கலைக்கழக மாணவி ஒருவர் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் மாணவிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்தை தவிர்த்து வெளி மாவட்டங்களில் இருந்து இங்கு பயிலும் மாணவ, மாணவிகள் விடுதிகளில் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். இதில் மாணவியர் விடுதியில் தங்கிப் படித்த மாணவி ஒருவர் இன்று விடுதியிலேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

மேலும், அந்த மாணவியின் அறையில் மூன்று பக்க கடிதத்தை கைப்பற்றிய போலீசார் காதல் தோல்வியால் இந்த முடிவை மேற்கொண்டாரா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையடுத்து, நேற்று மதியம் பக்கத்து அறையில் தங்கியிருந்த மாணவிகள் சந்தேகப்பட்டு நிவேதாவின் அறையையே ஜன்னல் வழியாக எட்டி பார்த்தபோது உள்ளே நிவேதா மின் விசிறியில் தூக்கில் தொங்கியது தெரிய வந்தது.

தகவலறிந்து வந்த கருப்பூர் போலீசார், அந்த அறையின் கதவை உடைத்து திறந்து நிவேதாவின் சடலத்தை கைப்பற்றிய போலீசார் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் தூக்கிட்டு இறந்த மாணவி தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் வசிக்கும் சர்க்கரை ஆலை ஊழியர் திருமலை என்பவரின் மகள் நிவேதிதா என்பது தெரியவந்தது. இந்த மாணவி தாவரவியல் முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

அதைத்தொடர்ந்து, நிவேதாவின் அறையில் காவல்துறை சோதனையிட்டதில், மூன்று பக்க கடிதம், டைரி மற்றும் காதல் சின்னத்துடன் கூடிய பொருட்கள் சிக்கின. எனவே மாணவி நிவேதா காதல் தோல்வியால் தற்கொலையா? அல்லது வேறு காரணமா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மாணவி நிவேதாவின் தற்கொலையால், விடுதியில் மற்ற மாணவிகளும், மாணவர்களும் நள்ளிரவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், இதையடுத்து பெரியார் பல்கலைக்கழக விடுதிக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 400 க்கும் மேற்பட்ட மாணவிகள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றனர்.


இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

Get real time updates directly on you device, subscribe now.

You might also like