கொழும்பை மீண்டும் அச்சுறுத்திய குண்டு வெடிப்பு! தென்னிலங்கையில் பரபரப்பை ஏற்படுத்திய கடிதம்

தியதலாவை பிரதேசத்தில் பேருந்து ஒன்றில் வெடிப்பு ஏற்பட்டமையை தொடர்பில் சமூகவளைத்லங்கள் போலியான கட்டுக்கதைகள் பரவி வருகின்றன.

இந்த நிலையில் இதற்கான பொறுப்பை ஏற்பதாக கூறி அமைப்பு ஒன்றினால் வெளியிடப்பட்ட கடிதம் ஒன்று வெளியாகியுள்ளது.

குண்டு வெடிப்பு சம்பவத்தினை தமிழீழ கோரிக்கையை முன்வைத்துள்ள அமைப்பு ஒன்றினால் பொறுப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.

எப்படியிருப்பினும் இவ்வாறான அமைப்பு ஒன்று இல்லாத நிலையில் மக்களை தவறான முறையில் திசை திருப்பும் நோக்கில் போலி கடிதம் வெளியிடப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் பலர் இந்த கடிதத்தை பகிர்ந்து வருகின்ற நிலையில் இலங்கையின் பிரபல பாடகர் உட்பட அந்த கடிதத்தை பகிர்ந்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் இராணுவ சிப்பாய் ஒருவர் தொடர்புபட்டுள்ளதாக இராணுவ தரப்பினை மேற்கோள் காட்டி தகவல்கள் வெளியாகி இருந்தன.

யாழ்ப்பாணத்தில் செயற்படும் இராணுவ முகாம் ஒன்றிலிருந்து குண்டொன்றை எடுத்துச் சென்ற வேளையில் தியதலாவை வைத்து வெடித்து சிதறியது.

இந்த வெடிப்பு சம்பவம் காரணமாக இராணுவத்தினர் உட்பட 19 பேர் படுகாயம் அடைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான போலியான பிரச்சாரங்கள் மூலம் தென்னிலங்கை மக்கள் மத்தியில் மீண்டும் விடுதலைப் புலிகளின் வருகைக்கான தகவல்களை வெளியிட்டு அரசியல் லாபம் தேட முற்படுவதாக பல்வேறு தரப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர்.