குழந்தை பெற முடியாத பெண்.. இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்த கணவன்.. வெளியான உண்மை சம்பவம்..!

நாளுக்கு நாள் உலகில் எவ்வளவோ அதிசயங்கள் தினந்தோறும் நடந்து வருகிறது. அதில் பெரும்பாலும் மருத்துவத்துறையில் நடக்கும் சாதனைகள் நம்மையே தலைசுற்ற வைக்கிறது.

அந்த வகையில் அமெரிக்கவை சேர்ந்த ஒரு பெண்ணின் கணவர் குழந்தை பெற்றெடுத்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

அமெரிக்காவின் கொலம்போ பகுதியைச் சேர்ந்த க்ரிஷ் மற்றுன் எமி தம்பதிகளான இவர்கள் குழந்தை பெற்றுக்கொள்வதற்காக மருத்துவர்களை அணுகியுள்ளனர். அதனைத்தொடர்ந்து எமிக்கு பலமுறை விந்தணுக்கள் செலுத்தப்பட்டும் அவரால் கர்ப்பம் தரிக்க முடியவில்லை.

இதனால் அவரது கணவர் கிரிஷை குழந்தை பெற சொல்லி மருத்துவர்கள் ஆலோசனை கூறியுள்ளனர். கிரிஷ் தற்போது ஒரு ஆணாக இருந்தாலும், பிறவியில் அவர் ஒரு பெண், அதாவது திருநம்பி. இதனால் விந்தணுவை தானமாக பெற்று அவரது கர்ப்பப்பையில் வைத்துள்ளனர்.

நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

இதனையடுத்து கடந்த 2014 ஆம் ஆண்டு ஒரு பெண் குழந்தையும், தற்போது மற்றொரு குழந்தையும் பெற்றெடுத்துள்ளனர் இந்த தம்பதியினர்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like