வவுனியாவில் பட்டப்பகலில் நகைகள் கொள்ளை! (படங்கள்)

வவுனியா – பட்டாணிசூர் 2ஆம் ஒழுங்கையில் அமைந்துள்ள வீடொன்றில் பட்டப்பகலில் வீட்டுக்குள் புகுந்த திருடர்கள் அங்கிருந்த பெறுமதியான நகைகளை திருடிச் சென்றுள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று பிற்பகல் வேளையில் இடம்பெற்றுள்ளதாக நெளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வவுனியா பட்டாணிசூர் 2ஆம் ஒழுங்கையில் சிறிதரன் மலர்வதனி வாடகை வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார்.

இன்று மதியம் 11.00 மணியளவில் வீட்டினை பூட்டி விட்டு உறவினர் வீட்டிற்கு சென்ற சமயத்தில் வீட்டின் கதவினை திறந்து அலுமாரியினை உடைத்து அதனுள் இருந்த சுமார் 9 பவுன் நகைளை திருடர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

2.15 மணியளவில் வீடு திரும்பிய போது வீட்டின் கதவு திறக்கப்பட்டதை அவதானித்த குறித்த பெண் உடனடியாக அவரச தொலைபேசி இலக்கமான 119 க்கு அழைப்பினை ஏற்படுத்தி சம்பவத்தினை தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த நெளுக்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.அத்தனாயக்க தலமையிலான பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like