வலி.கிழக்கு பிரதேச சபையால் புனரமைக்கப்பட்ட நிலையில் இவ் வீதிக்கான பெயர் பலகை இன்று (22) ஆம் திகதி சற்று முன்னர் 5 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது.

யாழ்ப்பாணம்-பருத்தித்துறை வீதியில் நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரிக்கு அண்மையிலுள்ள அரசகேசரப்பிள்ளையார் கோயில் வீதி வலி.கிழக்கு பிரதேச சபையால் புனரமைக்கப்பட்ட நிலையில் இவ் வீதிக்கான பெயர் பலகை இன்று (22) ஆம் திகதி சற்று முன்னர் 5 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது.

இதனை நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியின் முன்னாள் அதிபர் இ.குணநாதன் மற்றும் நீர்வேலி அரசகேசரிப் பிள்ளையார் கோயில் பரிபாலன சபையின் தலைவர் கந்தையா கிருபாகரன் இணைந்து திறந்து வைத்தனர்.

இந்தப் பெயர் பலகையை அமைப்பதற்கு நீர்வேலி அரசகேசரிப் பிள்ளையார் கோயில் பரிபாலன சபையின் தலைவர் கந்தையா கிருபாகரன் என்பவரால் தனது சொந்தச் செலவில் அமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like