தனியார் பஸ்களில் இன்றுமுதல் இதற்கு தடை!

தனியார் பஸ்களில் பயணிகள் அசௌகரியத்திற்கு உள்ளாகும் வகையில் அதிக சத்தத்துடன் பாடல்கள் மற்றும் காணொளிகளை ஒலி, ஔிபரப்புவது இன்று முதல் தடை செய்யப்பட்டுள்ளது.

தனியார் பஸ்களில் அதிக சத்தத்துடன் பாடல்கள் ஒலிபரப்பப்படும் பட்சத்தில் ,அது தொடர்பான முறைப்பாடுகளை 1955 என்ற தொலைபேசி இலக்கத்திர்கு பயணிகள் தெரிவிக்கலாம் என போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் பொதுமக்களின் முறைப்பாடுகளுக்கு அமைய பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போக்குவரத்து ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை அனைத்து பஸ் வண்டிகளிலும் ஒலிபரப்புவதற்கு ஏற்ற வகையில் 1000 பாடல்கள் அடங்கிய தொகுப்புகள் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் இன்று முதல் குறித்த பாடல்கள் மாத்திரமே பஸ்களில் ஒலிபரப்பப்பட வேண்டும் என போக்குவரத்து அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

மேலும் இது குறித்து கண்டறிவதற்கு இன்று முதல் விசேட குழுக்களை ஈடுபடுத்தியுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.