தலைவராக சஜித் தெரிவு? கூட்டத்தை பாதியில் நிறுத்தி விட்டு தலை தெறிக்க ஓடிய ரணில்..

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக சஜித் பிரேமதாசவை தெரிவு செய்ய கட்சியின் நாடாளுமன்றக் குழு ஏகோபித்த கருத்துக்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் திடீரென கூட்டத்தை ஒத்திவைத்து கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க வெளியேறினார் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

கட்சித் தலைமைத்துவ மாற்றம் குறித்து தீர்மானம் எடுக்க ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் கட்சியின் தலைமையகமான சிறிகோத்தாவில் இன்று மாலை தொடக்கம் சுமார் 4 மணி நேரம் இடம்பெற்றது.

இந்தக் கூட்டம் எந்த இறுதித் தீர்மானமும் இன்றி நிறைவு பெற்றதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

எனினும் கட்சியின் தலைவராக சஜித் பிரேமதாசவை தெரிவு செய்வது தொடர்பில் கூட்டத்தில் ஏகோபித்த கருத்து வெளியிடப்பட்ட நிலையில் கூட்டத்தினை தலைவர் ரணில் விக்கிரமசிங்க திடீரென ஒத்திவைத்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சா டி சில்வா தெரிவித்தார்.

அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவம் தொடர்பான இறுதித் தீர்மானத்தை ரணில் விக்கிரமசிங்க, கரு ஜயசூர்ய மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோர் அடுத்தவாரம் கூடி எடுப்பார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் நவீன் திசாநாயக்க தெரிவித்தார்.