ஊட்டத்தச்சத்து குறைப்பாட்டினால் உயிரிழந்த மாணவி

சுகவீனம் உற்ற தனது சகோதரருக்கு உதவுவதற்காக ஒரு நாளைக்கு வெறும் 2 யுவானில் (50 ரூபா) உயிர்வாழ்ந்த சீன மாணவி ஒருவர் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டினால் உயிரிழந்துள்ளார்.

24 வயதான வுஹுவாங் என்ற அந்த மாணவியின் வெறும் 20 கிலோகிராம் எடை கொண்ட புகைப்படம் சீனாவில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. சுவாசப் பிரச்சினை காரணமாக அவர் கடந்த ஒக்டோபர் மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவர் மீண்டு வருவதற்கு நன்கொடைகள் குவிந்து வந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை அந்த மாணவி உயிரிழந்ததாக அவரது சகோதரர் குறிப்பிட்டுள்ளார்.

மூன்றாம் ஆண்டு பல்கலைக்கழக மாணவியான வுஹுவாங் ஐந்து ஆண்டுகளாக மிகக் குறைந்த உணவுகளை உண்டு வந்ததால் இதய மற்றும் சிறுநீரக பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்ததாக மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தனது இளம் சகோதரரின் மனநல பிரச்சினைக்கு மருத்துவ சிகிச்சைக்கே அதிக தொகை செலவாவதால் தனது சொந்தத் தேவைக்கு நாளைக்கு 2 யுவான் மாத்திரமே அவர் செலவிட்டுள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளாக அவர் மிளகுடன் சோறு மாத்திரமே உட்கொண்டு வந்துள்ளார்.