திருகோணமலையில் கண்டுபிடிக்கப்பட்ட வித்தியாசமான பாரிய பீரங்கி குண்டு

திருகோணமலையில் பழமை வாய்ந்த பீரங்கி வெடிகுண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

திருகோணமலை வைத்தியசாலையின் அவசர விபத்து பிரிவு நிர்மாணிப்பதற்காக அஸ்திவாரம் வெட்டும் போது இந்த குண்டு மீட்கப்பட்டுள்ளது.

விஜித யுகத்திற்கு சொந்தமானதாக கூறப்படுகின்ற பீரங்கியின் பகுதி நேற்று திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அருங்காட்சியகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இந்த பீரங்கி ஏனைய பீரங்கிகளை விடவும் முற்றிலும் வித்தியாசமானவை எனவும், அதன் பின் பக்க பகுதி முழுமையான மூடப்பட்டுள்ளதாக தொல்பொருளியல் உதவி இயக்குநர் சுமனதாஸ தெரிவித்துள்ளார்.

இந்த பீரங்கியின் நிறை 8 டென் எனவும் 11 அடி நீளமான எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கி.பி 1700 ஆண்டில் பீரங்கி அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ளதாகவும், பின்னர் கட்டடங்களில் அந்த பீரங்கி மூடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கு பயன்படுத்தப்பட்டுள்ள உலோகம் மிகவும் வலுவானதென தெரிவிக்கப்படுகின்றது.