கோட்டாபயவின் உத்தரவை மீறி கொழும்பில் மூவின மக்களும் தமிழில் இசைத்த தேசிய கீதம்

எதிர்வரும் சுதந்திரதின கொண்டாட்டத்தின்போது சிங்களத்தில் மட்டுமே தேசிய கீதம் பாடப்படும் என பொதுநிர்வாகம், உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் அறிவித்திருந்தார்.

இநிலையில் அமைச்சரின் இந்த அறிவிப்புக்கு உள்நாட்டில் இருந்து மட்டுமல்ல, வெளிநாடுகளில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்த விவகாரம் சரச்சையானதையடுத்து, அப்படியொரு முடிவெடுக்கவில்லையென அமைச்சர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

எனினும், இதுவரை தமிழ் மொழியிலும் தேசிய கீதம் பாடப்படுமென யாருமே தெரிவிக்கவில்லை. அண்மையில் பத்திரிகைத் துறை சார்ந்த சிலரை சந்தித்தபோது, பிரதமர் மஹிந் ராஜபக்சவும், அப்படியொரு முடிவெடுக்கவில்லையென்றுதான் தெரிவித்தாரே தவிர, தமிழிலும் தேசிய கீதம் பாடப்படுமென கூறவில்லைவில்லை.

இந்த நிலையில், நேற்றையதினம் கொழும்பிலுள்ள சில சிங்கள, முஸ்லிம், தமிழ் இளையவர்கள், கலைஞர்கள் இணைந்து தமிழில் தேசிய கீதம் இசைத்துள்ளனர்.

சிங்களம் மட்டும் தேசியகீதம் என்ற அரசின் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழில் அவர்கள் தேசிய கீதம் இசைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.