கனடாவில் பெண் ஒருவரை இடித்து விட்டு ஓடிய தமிழர்கள்!

கனடா-கடந்த வாரம் மிசிசாகாவில் உயிராபத்தான நிலையில் 61-வயது பெண்ணை இடித்து விட்டு ஓடியதாக பிரம்ரனை சேர்ந்த 60-வயதுடைய சச்சிதானந்தா வைத்தியலிங்கம் என்பவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பிப்ரவரி 15, இரவு எட்டு மணியளவில் மேவிஸ் வீதி மற்றும் நொட்டி பைன் குரோவ் பகுதியில் மோதல் நடந்தது.

61-வயதுடைய லெய்லா வில்கி என அடையாளம் காணப்பட்ட பெண் இறந்தவராவார்.

விபத்துடன் சம்பந்தப்பட்ட வாகனத்தின் சாரதி பாதசாரியை மோதிய பின்னர் ‘பயந்த நிலையில்’ காணப்பட்டதாகவும் விபத்தின் போது பாதசாரி சரியான வழியில் பாதையை கடக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்துடன் சம்பந்தப்பட்ட வாகனம் பிரம்ரனில் காணப்பட்டதென விசாரனையாளர்களின் கூற்றுபிரகாரம் தெரியவந்துள்ளது.

பிரம்ரனை சேர்ந்த சச்சிதானந்தா வயித்திலிங்கம் வழக்கறிஞர் ஒருவருடன் சனிக்கிழமை பொலிசாரிடம் சரணடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மரணத்திற்கு காரணமாக இருந்தும் சம்பவ இடத்தில் தரித்து நிற்கவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகம் காரணமாக 25-வயதுடைய ஹிவிசா சச்சிதானந்தன், சஜீத்தா சச்சிதானந்தன், 28 மற்றும் கௌதம் சற்குணராஜா, 28 மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இவர் மூவரும் மார்ச் 26, நீதி மன்றத்தில் ஆஜராவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.