தமிழ் அரசுக்கட்சி யாழ் மாவட்ட குழுவில் பெரும் பிரளயம்! சுமந்திரனின் மாஸ்டர் பிளான்

இலங்கை தமிழ் அரசு கட்சியின் யாழ் மாவட்ட தொகுதிக் கிளை கூட்டம் நேற்று இடம்பெற்றது.

இதன்போது, கட்சியின் தனிமனித சாம்ராஜ்ஜியம் குறித்து பலத்த அதிருப்தி தெரிவிக்கப்பட, நேற்று மதியம் பெரும் பிரளயம் ஏற்பட்டது.

இலங்கை தமிழ் அரசுக்கட்சியின் யாழ் மாவட்ட வேட்பாளர் பட்டியலில் சரவணபவன் எம்.பியின் பெயரை உள்ளடக்கக் கூடாது என எம்.ஏ.சுமந்திரன், கட்சித் தலைவர் மாவை சேனாதிராசாவை வலியுறுத்தியதாக வெளியான செய்தியை அடுத்தே இந்த கலவரம் உருவானது.

நேற்று இலங்கை தமிழ் அரசு கட்சியின் யாழ் மாவட்ட தொகுதிக்கிளை கூட்டத்தில் நேற்று வெளியான செய்தியை சுட்டிக்காட்டி பல உறுப்பினர்கள் கொந்தளித்தனர்.

சரவணபவன் எம்.பி அங்கு கருத்து தெரிவித்தபோது, இனி கட்சிக்குள் தனி மனித சாம்ராஜ்ஜியங்களிற்கு இடமிருக்க முடியாது.

இந்த தனி மனித நடவடிக்கைகளால்தான் கட்சி மற்றும் மக்கள் பெரிய சீரழிவை சந்திக்க காரணம் இனி இதற்கு இடமளிக்க முடியாது என கடும் தெனியில் கூறியதுடன் வடக்கை சீரழித்தது போதாது என கிழக்கில் மட்டக்களப்பில் சிங்களத்தியின் மகனிற்கு ஆசனம் ஒதுக்கியுள்ளார்.

அவரின் எடுபிடிகள் யார்? யாரோ?? அவர்களிற்கு எல்லாம் தேர்தலில் ஆனசம்! ஏன் என்றால் மட்டக்களப்பில் உள்ளவர்கள் எல்லாம் மடையன் தானே, சுமந்திரனின் சுயநலம் தன்னை விட யாரும் முன்னேற கூடாது என்பதில் தமிழர் அரசியல் வரலாற்றில் கிடைத்த மிக தெளிவாக உள்ள ஒரு சுய நல அரசியல்வாதி.

அது மட்டுமல்லாது இளைஞர்கள் என ஒரு புதிய நாடகத்தை ஆடி அதில் அவர்களிற்கான தகுதி 2015வரை மகிந்தவை ஆதரித்திருக்க வேண்டும் அத்தடன் சுமந்திரனை சார்… சார்… என அழைக்க வேண்டும் என்பது அடிப்படை தகுதி.

ஏன் பிற மாவட்டங்களில் உள்ளவர்கள் ஆனாலும் சரி, இனி வருபவர்கள் ஆனாலும் சரி அவர்கள் வாய் கிழிய தமிழில் மட்டும் கதைப்பவர்களாக இருக்க வேண்டும்! அதை விடுத்து வேறு மொழி தெரிந்தவர்களை தெரிவு செய்யக் கூடாது என்பது சுமந்திரனின் தாரக மந்திரம்.

அது மட்டுமா சட்டத்துறை தலைவரான ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராஜாவையே தவிர்த்து விட்டுத் தான் கொழும்பில் சகல சந்திப்புக்களையும் செய்யும் மிக தந்திரி, அது மட்டுமா வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுபவர்கள் தனக்கு எடுபிடிகளாக இருப்பவர்கள் மட்டுமே போட்டியிட உருத்துடையவர்கள் என சுமந்திரன் நினைப்பது படு கேவலம் என சரவணபவன் எம்.பி கூறியுள்ளார்.

இதன் பின்னர் கருத்து தெரிவித்த பல உறுப்பினர்கள், எம்.ஏ.சுமந்திரனின் பெயரை குறிப்பிடாமல் கடுமையான அதிருப்தியை தெரிவித்தனர்.

தொகுதிக்கிளைகளையோ, கட்சியின் செயற்பாட்டாளர்களையோ கலந்துரையாடாமல் தன்னிச்சையாக செயற்படுவது, குழு அமைப்பது, தமக்கு வேண்டியவர்களை முன்னுரிமையளிப்பது ஆகிய குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர்.

வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கு தெரிவுக்குழு ஒன்று உள்ளபோதும், அதை யாரும் கணக்கெடுக்காமல் விரும்பிய வேட்பாளர்களை களமிறக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

தொகுதிக்கிளைகளின் முடிவை மீறி, எம்.பிக்கள் தன்னிச்சையாக முடிவெடுத்தால், அதற்கு எதிராக தொகுதிக்கிளைகள் போராட்டம் நடத்துமென்றும் சில உறுப்பினர்கள் எச்சரித்தனர்.

இதையடுத்து, அனைத்து மாவட்ட வேட்பாளர்களையும் அந்தந்த மாவட்ட தெரிவுக்குழுவே தீர்மானிக்கும் என்றும், தனி மனிதர்கள் அல்லவென்றும் தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன், தொகுதிக்கிளைகளை மீறி எம்.பிக்கள் முடிவெடுப்பதாக குற்றம்சுமத்தப்பட்டது. இதையடுத்து, ஒவ்வொரு தொகுதிக்கிளை கூட்டங்களை விரைவாக நடத்தி, அப்பிராயங்களை அறிந்து கொள்வதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி வரும் 26ம் திகதி யாழ், மானிப்பாய் கிளையிகளில் கூட்டம் இடம்பெறும்.

இதில் கட்சியின் மாவட்ட எம்.பிக்கள் நால்வரும் கட்டாயம் சமூசமளிக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.