யாழ்ப்பாணம் பிரதேச செயலக மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் ஆடை வடிவமைத்தல், அழகுக்கலை மற்றும் மனைப்பொருளியல் கண்காட்சி (படத்தொகுப்பு)

வடக்கு மாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களத்தின் அனுசரணையுடன் யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் பிரிவால் நடாத்தப்படும் யாழ்ப்பாணம் மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் ஆடை வடிவமைத்தல், அழகுக்கலை, மற்றும் மனைப்பொருளியல் கண்காட்சி யாழ். பரியோவான் கல்லூரிக்கு முன்பாக அமைந்துள்ள யாழ்ப்பாணம் பிரதேச செயலக பழைய கட்டடத் தொகுதியில் இயங்கிவரும் யாழ்ப்பாணம் மகளிர் அபிவிருத்தி நிலையத்தில்; 21.02.2018 அன்று யாழ்ப்பாணம்; பிரதேச செயலாளர் பொன்னம்பலம் தயானந்தன் அவர்களின் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

இந் நிகழ்வின் முதன்மை விருந்தினராக யாழ். மாவட்ட வடக்கு மாகாணசபை உறுப்பினர் என். கனகரட்ணம் விந்தன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக யாழ் மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு. நா. பஞ்சலிங்கம், யாழ்ப்பாணம் பிரதேச கிராம, மாதர் கிராம அபிவிருத்திச் சங்கங்களின் சமாசத் தலைவர் திரு. நாகலிங்கம் தனேந்திரன் ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

கண்காட்சியினை இந் நிகழ்வின் முதன்மை விருந்தினராகக் கலந்து சிறப்பித்த யாழ். மாவட்ட வடக்கு மாகாணசபை உறுப்பினர் என். கனகரட்ணம் விந்தன் அவர்கள் நாடாவை வெட்டி ஆரம்பித்து வைத்துப் பார்வையிடுவதனையும், தனது நிதி ஒதுக்கீட்டின் மூலம் குறித்த மகளிர் அபிவிருத்தி நிலையத்திற்கு மூலப்பொருட்கள் வழங்குவதனையும், ஏனைய நிகழ்வுகளையும்; படங்களில் காணலாம்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like